விஷம் குடித்த எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி சாவு


விஷம் குடித்த எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி சாவு
x

விஷம் குடித்த எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி சாவு

திருவாரூர்

கோட்டூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுருவாடி மாரியம்மன் கோவில் ்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது40). எலக்ட்ரீசியன். கடந்த 19-ந்தேதி இவர் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திகேயன் இறந்தார். இதுகுறித்து கார்த்திகேயன் தந்தை பாலசுப்பிரமணியன் (60) விக்கிரபாண்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் எனது மகனுக்கும், அதே ஊரைச்சேர்ந்த காலனி தெருவில் வசிக்கும் செந்தில்குமார் என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தனது மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story