விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு


விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x

விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே ஆலமழை வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் கலையரசன் (வயது36). கூலித்தொழிலாளி. சில நாட்களாக இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 23-ந்தேதி வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்்சை பலனின்றி நேற்று கலையரசன் இறந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story