ராசிபுரம் அருகே பள்ளி மாணவி பலாத்கார முயற்சி; தொழிலாளி போக்சோவில் கைது
ராசிபுரம் அருகே பள்ளி மாணவி பலாத்கார முயற்சி; தொழிலாளி போக்சோவில் கைது
நாமக்கல்
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை தண்ணீர்பந்தல்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் விஷால் (வயது 18). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் ராசிபுரம் பகுதியில் உள்ள அவருடைய மாமா வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கும், விஷாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஷால் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியின் வீட்டுக்கு மது குடித்து விட்டு சென்ற விஷால் மாணவியின் தாயாரிடம் தகராறு செய்தார். இதுகுறித்து மாணவி ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷாலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Related Tags :
Next Story