அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணிபுரிபவர் பாலமுருகன் (வயது 51). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்புதான் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி பல்லடம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஆன் லைன் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் கடந்த 28.7.2023 அன்று பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து ேபராசிரியர் பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பேராசிரியர் பாலமுருகன் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவரை தேடி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, புகார் குறித்து தனியாக விசாரணை குழு அமைக்கப்பட்டு மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தமிழ்துறை பேராசிரியர் பாலமுருகன் மருத்துவ விடுப்பில் உள்ளதால் இன்னும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தனர்.






