கம்பம் போலீஸ் நிலையத்தில் வரவேற்பாளர் நியமனம்
கம்பம் போலீஸ் நிலையத்தில் வரவேற்பாளர் நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போலீஸ் நிலையத்துக்கு வரும் சிலர் எந்த பிரச்சினைக்கு எந்த அதிகாரியை சந்திக்க வேண்டும் என்பது தெரியாமல் தயங்கி நிற்பது வழக்கம். இதற்கு தீர்வு காணும் வகையில், போலீஸ் நிலையத்தில் புதிதாக வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் கம்பம் போலீஸ் நிலையத்தில் வரவேற்பாளர் நியமிக்கப்பட்டார். இவர் போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களை வரவேற்று, புகார் சம்பந்தமாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் என யாரை சந்திப்பது, புகார் எழுத தெரியாத மக்களுக்கு அவர்கள் சொல்வது போல் புகார் எழுதி கொடுக்கும் பணியையும் செய்வார். மேலும் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த நேரம், புகாரின் தன்மை ஆகியவற்றை வரவேற்பாளர் புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் புகார் மனுதாரர்களில் மனுக்கள் மீதான விசாரணை காலதாமதமின்றி முடித்து வைக்கப்படுகிறது.