கம்பம்சுருளி வேலப்பர் கோவிலில் பாலாலய பூஜை
கம்பம் சுருளி வேலப்பர் கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.
தேனி
கம்பத்தில் சுருளி வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இதனால் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையினர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கோவிலில் பாலாலய பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செ்யதனர்.
Related Tags :
Next Story