கம்பம் உழவர் சந்தையில் ஆலோசனை கூட்டம்
கம்பம் உழவர் சந்தையில் ஆலோசனை கூட்டம் நடந்தது
தேனி
தமிழகம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 வரை பயறு வகைகள், செக்கு எண்ணெய், சிறுதானிய வகைகள், நாட்டு கோழி முட்டை, காளான், வெல்லம், கருப்பட்டி போன்ற விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கம்பம் உழவர் சந்தையில் விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு நிர்வாக அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார், உதவி நிர்வாக அலுவலர் மாரிச்சாமி, மணிமாறன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகளுக்கு தமிழக அரசின் உத்தரவு குறித்து விளக்கி பேசினர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story