நல்லூர் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம்
நல்லூர் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சமடைந்தனர்
நாமக்கல்
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை புளியம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் பிரதீப் (வயது 23). இவர் சென்னையில் உள்ள டிராக்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும், கரூர் மாவட்டம் கந்தாணிபாளையத்தை சேர்ந்த ராமசாமி மகள் உமாபாரதி (23) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். உமாபாரதி பி.காம், பி.எட் முடித்துள்ளார்.
திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி நேற்று தொட்டியம் செவஞ்சிபாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது. இதையடுத்து நல்லூர் போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசி சமாதானம் செய்து காதல் கணவர் பிரதீப் குடும்பத்தினருடன் உமாபாரதியை அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story