சத்தியமங்கலத்தில் போலீஸ் ஏட்டு திடீர் சாவு


சத்தியமங்கலத்தில் போலீஸ் ஏட்டு திடீர் சாவு
x

சத்தியமங்கலத்தில் போலீஸ் ஏட்டு திடீர் சாவு

ஈரோடு

சத்தியமங்கலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள கடத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கவிதா (50), இவர்களுடைய மகன் சபரி (10). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கண்ணன் தன்னுடைய குடும்பத்துடன் சத்தியமங்கலம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கண்ணன் நேற்று முன்தினம் வேலை முடிந்த உடன் வீட்டுக்கு வந்தார். பின்னர் தூங்குவதற்காக அறைக்கு சென்றார். அதன்பிறகு இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவருடைய மனைவி அறைக்குள் சென்று கணவரை பார்த்தார். கண்ணன் படுக்கையில் அசைவற்று கிடந்தார். உடனே கவிதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கண்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story