போலீஸ் எழுத்து தேர்வை 1,636 பேர் எழுதவில்லை


போலீஸ் எழுத்து தேர்வை 1,636 பேர் எழுதவில்லை
x

போலீஸ் எழுத்து தேர்வை 1,636 பேர் எழுதவில்லை

ராமநாதபுரம்


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்த வருக்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதுவதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 725 பெண்கள் உள்பட 9 ஆயிரத்து 990 பேர் விண்ணப்பத்திருந்தனர். தேர்விற்காக மாவட்டத்தில் 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு நடைபெற்ற மையங்களில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக தேர்விற்கு வந்த தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அழைப்புக்கடிதம், புகைப்படத்துடன் பேனா, அடையாள அட்டை ஆகியவை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப் பட்டனர். செல்போன், கால்குலேட்டர், இதர மின்னணு சாதனங்கள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்கள் அனைத்தும் முழு வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையங்களுக்கு சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்து கண்காணித்தனர். தேர்வினை 8 ஆயிரத்து 354 பேர் மட்டுமே எழுதினர். இது 83.6 சதவீதம் ஆகும். ஆயிரத்து 636 பேர் இந்த தேர்வினை எழுதவில்லை.


Next Story