ஆசிரியர் மீண்டும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு
ஆசிரியர் மீண்டும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஒரு பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த ஆண்டு மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் ஆசிரியரை 10 மாதம் பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து கடந்த வாரம் பள்ளியில் மீண்டும் பணியில் சேர்ந்த அந்த ஆசிரியர் மீண்டும் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் முதுகுளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட மாணவி புகார் மனுவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சாட்சியம் அளித்த மாணவியிடம் புகாரை வாபஸ் பெற ேபாலீசார் வற்புறுத்தி மிரட்டியதாக அந்த மாணவி வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.