பாலக்கோடு போலீஸ் நிலையத்தில்கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராஜ்குமார் (வயது 24). என்ஜினீயரான இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகள் பிரியதர்ஷினி (22). இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜ்குமாரும், பிரியதர்ஷினியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கடந்த 26-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கதிர்புரத்தில் உள்ள ரெங்கநாதர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து நேற்று தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரியதர்ஷினியை காதல் கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.