பெண்கள், குழந்தைகளுக்கு எதிரானபாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைபுதிய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேட்டி


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரானபாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைபுதிய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேட்டி
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

புதிய போலீஸ் சூப்பிரண்டு

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த கலைச்செல்வன், சென்னை குற்றப்பிரிவு ஆவண காப்பகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ராஜேஷ்கண்ணன், நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாமக்கல் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்பனை செய்வோர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விரைவில் கைது

ஜேடர்பாளையம் தொடர் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைந்து கைது செய்யப்படுவார்கள். தீ வைப்பு சம்பவத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் நகரில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தனியாக இடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். என்ஜினீயரிங் முடித்து இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.பி.எஸ்.ஆக பதவி உயர்வு பெற்றார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார். இதேபோல் காஞ்சிபுரம், சென்னையிலும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story