ரேஷன் கடைகளுக்கு வழங்கும் பொருட்களில் முறைகேடு? குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு திடீர் சோதனை

ரேஷன் கடைகளுக்கு வழங்கும் பொருட்களில் முறைகேடு? குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு திடீர் சோதனை
x

ரேஷன் கடைகளுக்கு வழங்கும் பொருட்களில் முறைகேடு? குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு திடீர் சோதனை

ஈரோடு

தமிழ்நாட்டில் பொதுவினிேயாக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை சோதனை செய்ய தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி நேற்று ஈரோடு மாவட்டத்தில் தீடீர் சோதனை நடத்தினார்.

பெருந்துறையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து ரேஷன் அரிசி எடுத்து செல்லும் லாரிகளில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது அரிசி எடை, மூட்டைகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா? என்று அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் தண்ணீர்பந்தல், மயிலாடி ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் இறக்குவதையும் சோதனை செய்தனர். அப்போது நுகர்பொருள் வாணிபக்கழக ரேஷன் கடை பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது தொியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இந்தசோதனையின்போது குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் துணைசூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story