கண்காணிப்பு கேமரா அமைக்க போலீசார் ஆலோசனை


கண்காணிப்பு கேமரா அமைக்க போலீசார் ஆலோசனை
x

வாணியம்பாடி நகர பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க போலீசார் ஆலோசனை நடத்தினர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி,

வாணியம்பாடி நகர பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க போலீசார் ஆலோசனை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் நகரத்தின் நுழைவாயில்களில் பொதுமக்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆலோசனை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து வாணியம்பாடி நகரில் முதல் கட்டமாக புதூர் நுழைவாயிலில் பொதுமக்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமரா அமைக்க நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் எங்கெங்கே கேமரா அமைப்பது என்பது குறித்து அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து விரைவில் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.-

1 More update

Related Tags :
Next Story