கடலோர பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கடலோர பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான மணமேல்குடி, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், அரசங்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வேம்பு மற்றும் போலீசார் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். மேலும் கடலில் படகின் மூலம் சென்று கண்காணித்தனர். மேலும் ஒரு வாரம் முன்பு இலங்கை வாசிகள் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்கு ஊடுருவி சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக போலீசார் கடலோர பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story