செல்போன் திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு


செல்போன் திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு
x

பனப்பாக்கம், நெமிலி வாரச்சந்தை பகுதிகளில் செல்போன் திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை

நெமிலி

பனப்பாக்கம், நெமிலி வாரச்சந்தை பகுதிகளில் செல்போன் திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பனப்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பனப்பாக்கத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வாரந்தோறும் சந்தைக்கு வரும் பொது மக்களிடம் இருந்து செல்போன்கள் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் விதமாக நேற்று நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் இலட்சுமிபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவிலு, லோகேஷ், ஜெயராஜ், சங்கர் ஆகியோர் தலைமையில் நான்கு குழுக்களாக பிரிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்களை சந்தேகத்திற்கிடமாக யாராவது பின் தொடர்ந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கூறினர். இதேப்போன்று நெமிலி பகுதியில் நடைபெறும் வாரச் சந்தையிலும் செல்போன் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story