சேலத்தில் வீட்டின் ஜன்னல் வழியாக 5 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


சேலத்தில் வீட்டின் ஜன்னல் வழியாக 5 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலத்தில் வீட்டின் ஜன்னல் வழியாக 5 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகைகள், செல்போன் திருட்டு

சேலம் 5 ரோடு ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள அண்ணாபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகள் பூரணி (வயது 24). இவர் திருமணமாகி கணவருடன் ஓசூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் பிரசவத்திற்கு வந்த பூரணி தனது தந்தை வீட்டில் உள்ளார். அவருக்கு பிரசவம் ஆகி கைக்குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு பூரணி தூங்குவதற்கு முன்பு தான் அணிந்திருந்த 3 பவுன் வளையல், 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் தனது செல்போனை வீட்டில் உள்ள டிரசிங் டேபிள் மீது வைத்தார். பின்னர் நேற்று காலையில் அவர் எழுந்து பார்த்த போது, டிரசிங் டேபிளில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் இருந்த நகைகள், செல்போன் திருட்டு போனது குறித்து முத்துச்சாமி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

ஜன்னல் வழியாக கைவரிசை

விசாரணையில் நகைகள் மற்றும் செல்போன் வைத்திருந்த டிரசிங் டேபிள் ஜன்னல் அருகே இருந்ததால் இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஜன்னல் வழியாக குச்சியை கொண்டு நகைகள் மற்றும் செல்போனை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் ஜன்னல் வழியாக நகைகள், செல்போனை திருடி கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story