போலீசார் சாராய வேட்டை 4 பெண்கள் உள்பட 9 பேர் கைது


போலீசார் சாராய வேட்டை 4 பெண்கள் உள்பட 9 பேர் கைது
x

சங்கராபுரம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் போலீசார் சாராய வேட்டை 4 பெண்கள் உள்பட 9 பேர் கைது

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகில் சாராயம் விற்பனைசெய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த மீனாட்சி(வயது 40), வீட்டின் அருகே சாராயம் விற்ற மொட்டையம்மாள்(58), நெடுமானூர் கிராமத்தைச்சேர்ந்த முத்தம்மாள்(34), சங்கராபுரத்தை சேர்ந்த ஏழுமலை(54) ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 41 லிட்டர் சாராயபாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

அதேபோல் மூங்கில்துறைப்பட்டு அருகே வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் ரங்கப்பனூர், புதுப்பட்டு, மூலக்காடு, புளியங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த மூலக்காடு பகுதியை சேர்ந்த குமார்(48), கொடியனூர் வெள்ளையன்(40), சின்னபுளியங்கொட்டை பிரபு(31), ரங்கப்பனூர் ராஜேந்திரன்(55) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story