தேசிய விளையாட்டு போட்டியில் அசத்திய போலீஸ் ஏட்டு
தேசிய விளையாட்டு போட்டியில் அசத்திய போலீஸ் ஏட்டு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ்(வயது 43). இவர் மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.
இதில் 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கோவிந்தராஜ் கலந்துகொண்டு 400 மீட்டர் ஓட்ட பந்தயம் மற்றும் 1,600 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடித்தார். மேலும் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்ட பந்தயம், 80 மீட்டர் தடை தாண்டுதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் 2-ம் இடம் பிடித்தார். பொது பிரிவிலும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3-ம் இடம் பிடித்து அசத்தினார். 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் பெற்ற போலீஸ் ஏட்டு கோவிந்தராஜை, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார் மேலும் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசாரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.