திருக்கார்த்திகை தீபதிருநாளில் திண்டுக்கல் மலைக்கோட்டையை பூட்டி போலீஸ் குவிப்பு


திருக்கார்த்திகை தீபதிருநாளில் திண்டுக்கல் மலைக்கோட்டையை பூட்டி போலீஸ் குவிப்பு
x

திருக்கார்த்திகை தீபதிருநாளில் திண்டுக்கல் மலைக்கோட்டை நுழைவு வாயிலை பூட்டி போலீஸ் குவிக்கப்பட்டனர். இதனால் நுழைவு வாயிலில் கொப்பரை தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல்

திருக்கார்த்திகை தீபதிருநாளில் திண்டுக்கல் மலைக்கோட்டை நுழைவு வாயிலை பூட்டி போலீஸ் குவிக்கப்பட்டனர். இதனால் நுழைவு வாயிலில் கொப்பரை தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டை

திண்டுக்கல்லின் வரலாற்று சின்னமான மலைக்கோட்டையின் உச்சியில் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. அங்கு சாமி சிலைகள் எதுவும் இல்லாததால் 200 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடு நடைபெறுவது இல்லை. எனினும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் சென்று வருகின்றனர்.

மேலும் அங்கு சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியினர் வைத்த அபிராமி அம்மன் சிலையும் அகற்றப்பட்டது.

இதேபோல் திருக்கார்த்திகை தினத்தில் இந்து மக்கள் கட்சியினர் மலைக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சி செய்வார்கள். இதற்காக திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டதும் அவர்களை போலீசார் கைது செய்து விடுவார்கள்.

போலீஸ் குவிப்பு

இந்த நிலையில் நேற்று திருக்கார்த்திகை என்பதால் மலைக்கோட்டையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சுற்றுலா பயணிகளை மலைக்கோட்டையில் அனுமதிக்கவில்லை.

இதுமட்டுமின்றி மலைக்கோட்டையின் நுழைவுவாயில் பூட்டப்பட்டது. இதனால் மாலையில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்காக கொப்பரையுடன் வந்தனர். ஆனால் மலைக்கோட்டை நுழைவுவாயில் பூட்டப்பட்டு இருந்ததால், நுழைவுவாயில் படிக்கட்டில் கொப்பரையை வைத்து பக்தர்கள் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story