ஆவடியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காவலர் சமுதாய நலக்கூடம்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


ஆவடியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காவலர் சமுதாய நலக்கூடம்-  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 30 Dec 2022 10:06 PM IST (Updated: 30 Dec 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை மாவட்டம் முத்தாப்புதுப்பேட்டை, திருநெல்வேலி மாவட்டம் மானூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் 3 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையக் கட்டடங்கள்.

சென்னை மாவட்டம் ஆவடியில் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் சமூதாயநலக்கூடம் மற்றும் தருமபுரி மாவட்டம் தருமபுரியில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலக இணைப்புக் கட்டடம்.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் . மொத்தம், 23 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.


Related Tags :
Next Story