பொதுக்குழுவுக்கு தடை கோரி மேல்முறையீடு: நீதிபதி வீட்டின் முன்பு காவல்துறை குவிப்பு
சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
சென்னை,
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்ட நிலையில் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளது. மேல் முறையீடானது நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி இல்லத்தில் விசாரணை நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயன் ஆஜராகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகின்றனர். விசாரணை நடைபெறும் நீதிபதி வீட்டின் முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியி
பொதுக்குழுவுக்கு தடை கோரி மேல்முறையீடு:ல் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story