திருச்சி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை


திருச்சி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
x

திருச்சி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்

திருச்சி

கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலையில் கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினர். திருச்சி மாவட்ட எல்லைகள் மற்றும் மாநகருக்குள் போலீசார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரிஸ்ட்டோ ரவுண்டான, டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம் பைபாஸ், உறையூர், ஸ்ரீரங்கம், கும்கோனத்தான் சாலை உள்ளிட்ட மாவட்ட எல்லை மற்றும் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்தனர். வாகனங்களில் சந்தேகப்படும் நபர்கள் இருக்கிறார்களா? வெடிபொருட்கள் ஏதேனும் கொண்டுசெல்கிறார்களா? என்று ஆய்வு நடததினர்.

1 More update

Next Story