நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் போலீசார் திடீர் சோதனை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி
தமிழகம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். மதுரை மண்டல சூப்பிரண்டு சினேகபிரியா உத்தரவின்பேரில் நெல்லை உட்கோட்ட துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 6 குடோன்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு உரிய முறையில் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறதா? அனுப்பி வைக்கப்படும் ரேஷன் அரிசியின் அளவு மற்றும் அதன் ரசீதுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story