26 மையங்களில் போலீஸ் தேர்வு- பெண்கள் ஆர்வத்துடன் எழுதினர்


26 மையங்களில் போலீஸ் தேர்வு-  பெண்கள் ஆர்வத்துடன் எழுதினர்
x

மதுரை மாவட்டத்தில் 26 மையங்களில் நேற்று போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நடந்தது.இந்த தேர்வை பெண்கள் ஆர்வத்துடன் எழுதினர்.

மதுரை


மதுரை மாவட்டத்தில் 26 மையங்களில் நேற்று போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நடந்தது.இந்த தேர்வை பெண்கள் ஆர்வத்துடன் எழுதினர்.

போலீஸ் தேர்வு

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது.

மதுரை மாநகரில் 6,926 ஆண்கள், 4,572 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 11,500 பேருக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரையில் சேதுபதி பள்ளி, வேலம்மாள் கல்லூரி, சவுராஷ்டிரா பள்ளி உள்ளிட்ட 12 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்று காலை தொடங்கிய இந்த தேர்வினை தேர்வாளர்கள் ஆர்வத்துடன் எழுதினர். தேர்வாளர்களின் வசதிக்காக பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது. மதுரை நகரில் இந்த தேர்வினை 9,737 பேர் எழுதினர். மீதமுள்ள 1,763 பேர் தேர்வு எழுதவில்லை. ஆனால் பெண்கள் ஆர்வத் துடன் தேர்வு எழுதினர். நகரில் நடந்த இந்த தேர்வினை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் வனிதா ஆகியோர் கண்காணித்தனர்.

மதுரை புறநகர்

இதுபோல், மதுரை புறநகரில் 14 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. 16,310 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 13,782 பேர் தேர்வு எழுதினர். 2,528 பேர் தேர்வு எழுதவில்லை. புறநகரில் நடந்த தேர்வினை தென்மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் கண்காணித்தனர். இந்த தேர்வில் ஒரு சில கேள்விகள் மட்டும் கடினமாகவும், மீதமுள்ள கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். மதுரை மாநகர், புறநகர் பகுதியில் 4 ஆயிரத்து 291 பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கலம்

திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் காவலர் பணிக்காக தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெறுவதை ஒட்டி தேர்வு மையங்களுக்கு வருபவர்கள் செல்போன் கொண்டுவரக் கூடாது, பேனா மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். திருமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியானபி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி தேர்வு மையங்களில் மொத்தம் 2 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.


Next Story