போலீசாரின் கொடி அணிவகுப்பு


போலீசாரின் கொடி அணிவகுப்பு
x

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் 9 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் இன்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பகுதியிலிருந்து நகர் வழியாக ஊர்வலமாக சென்று பெரிய கண்மாயில் கரைக்கப்பட உள்ளன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நெசவாளர் காலனி பகுதியில் தொடங்கி மதுரை ரோடு, புதிய பஸ் நிலையம், சிவன் கோவில் சந்திப்பு பஜார், திருச்சுழி ரோடு, பந்தல்குடி ரோடு வழியாக சென்ற போலீசாரின் கொடி அணிவகுப்பு டவுன் போலீஸ் நிலையம் சென்று நிறைவுற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 7 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.



Next Story