மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு


மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி மேட்டுப்பாளையம் நகரில் இந்து முன்னணி சார்பில் 70 இடங்களிலும், சிறுமுகையில் 36 இடங்களிலும், விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 25 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை ஒட்டி விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைதியாக நடைபெற காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன் குமார், நித்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அணி வகுப்பு ஊர்வலம் மேட்டுப்பாளையம்-கோவை ரோடு, ஊட்டி சாலை, ஒடந்துறை சாலை, உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் முடிவடைந்தது. விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகள் வைக்கப்படும் இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


Next Story