பாப்பாநாடு காவல் உதவி மையம் செயல்படத் தொடங்கியது


பாப்பாநாடு காவல் உதவி மையம் செயல்படத் தொடங்கியது
x

பாப்பாநாடு காவல் உதவி மையம் செயல்படத் தொடங்கியது

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டை அடுத்துள்ள பாப்பாநாடு கடைத்தெரு பிரதான சாலை ஓரத்தில் காவல் உதவி மையம் உள்ளது. இந்த காவல் உதவி மைய அறையிலிருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த சில வருடங்களாக இந்த காவல் உதவி மையம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் இந்த காவல் உதவி மைய அறை போஸ்டர் ஒட்டும் இடமானது. இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி'யில் வெளியானது.இதைத்தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் செயல்படாமல் மூடப்பட்டு இருந்த பாப்பாநாடு காவல் உதவி மையத்தை விரைவாக திறந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டனர். இதன்படி பாப்பாநாடு போலீசார் சம்பந்தப்பட்ட காவல் உதவி மைய அறையை திறந்து அங்கிருந்து போக்குவரத்தை சீர்படுத்துதல் போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கினர். பாப்பாநாடு காவல் உதவி மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், இது குறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பாப்பாநாடு பகுதி மக்களும், வணிகர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story