காட்சி பொருளாக உள்ள காவல் உதவி மையங்கள்


காட்சி பொருளாக உள்ள காவல் உதவி மையங்கள்
x

திருவண்ணாமலையில் காட்சி பொருளாக காவல் உதவி மையங்கள் உள்ளன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

பக்தர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் முதல் திருவண்ணாமலை நகரில் காவல்துறை சார்பில் காவல் உதவி மையங்கள் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று முன்தினம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் தேரோட்டம் நடைபெற்ற நாளான நேற்று பெரும்பாலான காவல் உதவி மையங்களில் எந்த ஒரு போலீசும் இல்லாமல் வெறிச்சோடி நிலையில் வெறும் காட்சிப் பொருளாகவே அவை இருந்தன. சில காவல் உதவி மையங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் சரிந்தும், மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடமாகவும் காணப்பட்டது. 6-ந்தேதி மகா தீபத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் முன்னோட்ட நிகழ்ச்சியான தேரோட்டத்தன்று இது போன்ற சூழ்நிலை நிலவுவதாக பொதுமக்கள் வேதனையாக தெரிவித்தனர்.


Next Story