போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.5,500 அபராதம்


போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.5,500 அபராதம்
x

கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.5,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாலிபர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமலும், ஹெல்மெட் அணியாமலும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்குவது, ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக 33 பேருக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story