ரேஷன் அரிசி உற்பத்தி ஆலைகளில் போலீசார் ஆய்வு


ரேஷன் அரிசி உற்பத்தி ஆலைகளில் போலீசார் ஆய்வு
x

ரேஷன் அரிசி உற்பத்தி ஆலைகளில் போலீசார் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் நவீன அரிசி ஆலைகள் மூலம் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யப்படும் அரிசி ஆலைகளில் முறைகேடு ஏதும் நடக்கிறதா? என்று திருச்சி மண்டல குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சனம் அறிவுரையின்படி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் பெரம்பலூர் அருகே அரணாரையில் உள்ள ஒரு அரிசி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ரேஷன் அரிசி தரமாக இருக்கிறதா? ஆலையில் இருந்து வேறு எங்கும் அனுப்பப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.


Next Story