நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் போலீசார் ஆய்வு


நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் போலீசார் ஆய்வு
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல் மூட்டைக்கு ரூ.40 வசூல் செய்வதாக புகார் வந்ததை தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் போலீசார் ஆய்வுசெய்தனர்.

மயிலாடுதுறை

நெல் மூட்டைக்கு ரூ.40 வசூல் செய்வதாக புகார் வந்ததை தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் போலீசார் ஆய்வுசெய்தனர்.

அறுவடை பணி

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய 4 தாலுகா பகுதிகளில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முன்பட்ட குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது நெல் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 40-க்கும் மேற்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நெல் மூட்டைக்கு ரூ.40 வசூல்

இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யப்படுவதாக அரசுக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 வசூல் செய்தால் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை துணை சூப்பிரண்டு் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

குடிமை பொருள் வழங்கல் போலீசார் ஆய்வு

அப்போது விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்..

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு, தரங்கம்பாடி, இலுப்பூர், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் ஆய்வு செய்தனர்.


Next Story