குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு ரோந்து தீவிரம்


குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு ரோந்து தீவிரம்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு ரோந்து தீவிரம்

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் குற்றச்சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் போில் முக்கிய சந்திப்பு பகுதிகள், குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் என மாநகர பகுதிகளில் இரவுநேர போலீஸ் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள், கார்களில் வருவோர் வாகனத்துக்கான ஆவணங்களை காட்டிய பிறகே அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் காவலன் செயலியில் தாங்கள் எந்த பகுதியில் தணிக்கை செய்து வருகிறார்கள் என்று பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. வாகன தணிக்கை முறையாக நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவும் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story