ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் ஒரு வாலிபரிடம் போலீசார் விசாரணை


ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் ஒரு வாலிபரிடம் போலீசார் விசாரணை
x

பாளையங்கோட்டையில் ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் ஒரு வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). தொழில்அதிபரான இவர் கடந்த மாதம் 19-ந்தேதி நாகர்கோவிலில் ஒரு நபரிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கி கொண்டு தூத்துக்குடி புறப்பட்டார். செல்லும் வழியில் நெல்லை கே.டி.சி. நகரில் ஒரு ஓட்டல் அருகே காரை நிறுத்தினார். அப்போது மர்மநபர்கள் அந்த காரில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த செல்வசரவண கண்ணன் (25) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் முக்கிய குற்றவாளிகளான தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த முத்துக்குமார், நெல்லை மகாராஜநகரை சேர்ந்த விஜய் ஆகியோர் சேரன்மாதேவி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சிவந்திபட்டியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story