போலீசார் விசாரணை


போலீசார் விசாரணை
x

தஞ்சையில் தூக்கில் தொங்கிய ஆண்பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சை கீழவாசல் ஆடக்கார தெருவில் உள்ள கட்டண கழிப்பறை கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள மரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து புளியந்தோப்பு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, குமார், சிறப்பு இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தூக்கில் தொங்கியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விவரம் தெரியவில்லை. இதையடுத்து தூக்கில் தொங்கியவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தூக்கில் பிணமாக தொங்கியவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story