மீன் பிடிக்க சென்றபோது காவிரி ஆற்றில் விழுந்த வாலிபரின் கதி என்ன?போலீசார் விசாரணை


மீன் பிடிக்க சென்றபோது காவிரி ஆற்றில் விழுந்த வாலிபரின் கதி என்ன?போலீசார் விசாரணை
x

மீன் பிடிக்க சென்றபோது மேட்டூர் காவிரி ஆற்றில் விழுந்த வாலிபரின் கதி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

மேட்டூர்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள மாமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 23). இவர் திருப்பூரில் ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த இவர் நேற்று கோட்டையூர் பரிசல் துறையில் மீன்பிடித்து கொண்டு இருந்தார். அப்ேபாது பாலமுருகன் ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து மேட்டூர் தீயணைப்பு நிலையம் மற்றும் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து சென்று பாலமுருகனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது கதி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story