வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்
வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிட நுழைவு வாயிலில் வாகன ஓட்டிகளுக்கு வேதாரண்யம் போலீஸ்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது சாலை விதிகளை மதிக்க வேண்டும். வாகனத்தில் போகும்போது செல்போன் பேசக்கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எடுத்து கூறினர்.
Related Tags :
Next Story