பழனியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


பழனியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2023 2:30 AM IST (Updated: 26 Feb 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

திண்டுக்கல்

பழனி முல்லைநகரை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 36). இவர், சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்தார். அவருடைய மனைவி வினோதா (24). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் வீரபாண்டி விடுப்பு எடுத்து பழனிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து மதுரை, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். நேற்று காலை வினோதா, குழந்தைகளை அழைத்து கொண்டு ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீரபாண்டி மட்டும் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் மாலையில் வினோதா வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தார். அப்போது, அங்குள்ள அறையில் வீரபாண்டி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீரபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக மன உளைச்சலில் வீரபாண்டி இருந்ததாகவும், இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story