நாமக்கல்லில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


நாமக்கல்லில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x
நாமக்கல்

வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. கலெக்டர் உமா தேசியக்கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளார். பின்னர் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி நேற்று முன்தினம் மைதானத்தை தயார் செய்யும் பணி நடந்தது. நேற்று காலையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு கம்பீரமாக நடந்து வந்தனர். நேற்று அதிகாலையில் நாமக்கல்லில் மழை பெய்ததால், இந்த ஒத்திகை சாலையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story