73 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து


73 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை புறநகர் பகுதியில் குற்றங்களை தடுக்க 73 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை தொடங்கியுள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை புறநகர் பகுதியில் 35 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அந்த பகுதிகளில் குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கவும், போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணி மேற்கொள்ளவும் புதிய இருசக்கர ரோந்து வாகன தொடக்க நிகழ்ச்சி பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடைபெற்றது. இதில்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார். ரோந்து வாகனங்களை கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து போலீசார் கூறும்போது, கோவை புறநகரில் மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, பேரூர், பொள்ளாச்சி ஆகிய உட்கோட்ட பகுதியில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லவும் 73 இருசக்கர ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் 8 மணி நேரம் வீதம் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றனர்.


Next Story