போலீஸ் நடைரோந்து திட்டம் தொடக்கம்


போலீஸ் நடைரோந்து திட்டம் தொடக்கம்
x

கோவையில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களுடன் பழகி பிரச்சினைகளை அறியவும் போலீஸ் நடைரோந்து திட்டம் தொடங்கப்படும் என்று கமிஷனர் பாலகிருஷணன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்

கோவையில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களுடன் பழகி பிரச்சினைகளை அறியவும் போலீஸ் நடைரோந்து திட்டம் தொடங்கப்படும் என்று கமிஷனர் பாலகிருஷணன் தகவல் தெரிவித்துள்ளார்.

குற்றத்தடுப்பு நடவடிக்கை

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து போக்குவரத்து சீரமைப்பு, குற்றத்தடுப்பு பணிகளில் தனி கவனம் செலுத்தி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் வாகன ரோந்து, மோட்டார் சைக்கிள் ரோந்து இருப்பது போல குற்றங்களை தடுக்க பொதுமக் களின் பிரச்சினைகளை அறிய போலீஸ் நடை ரோந்தும் தொடங்கப்பட உள்ளது. இந்த ரோந்து பணியில் போலீஸ் கமிஷனர் முதல் போலீசார் வரை அனைவரும் ஈடுபடுவார்கள்.

நடை ரோந்து இன்று தொடக்கம்

இதன்படி அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வரை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்து ரோந்து வருவார்கள். இந்த திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.

மேலும் கோவையில் மூடப்பட்டு கிடக்கும் போலீஸ் பூத்துக்கள் விரைவில் திறக்கப்படும். அதில் சுழற்சி அடிப்படையில் போலீசார் பணியில் இருப்பார்கள். போலீஸ் நிலையங்களுக்கு பணிக்கு வரும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை குறித்த நேரத்தில் பணிக்கு வரஉத்தரவிடப்பட்டுள்ளது. மதியம் 1 மணி நேரம் சாப்பாடு இடைவெளியைதவிர மற்ற நேரங்களில் போலீசார் காவல் நிலையங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துப்புதுலங்காத வழக்குகள் ஆய்வு

துப்புதுலங்காத பழைய குற்ற வழக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story