காவல்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்


காவல்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்
x

காவல்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூரில் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர் நல சங்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். 60 வயது முடிந்தவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க பஸ்பாஸ் வழங்க வேண்டும், அரசு பணியில் சேரும் பணியாளர்கள் ஓராண்டுக்குள் இறந்தால் பண பலன் இல்லை என்ற அரசாணையை மாற்ற வேண்டும், காவல்துறை பல்பொருள் அங்காடியில் வயதானவர்கள் அமர இருக்கை மற்றும் குடிநீர் வசதிகளை பெற்று தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்துக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story