போலீஸ் பாதுகாப்பு


போலீஸ் பாதுகாப்பு
x

நெல்லை முதன்மை கல்வி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் 2020-ம் ஆண்டு ஒரு மாணவர் 11-ம் வகுப்பும், அவருடைய தம்பி 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக அப்போது அரசு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த 16-ந்தேதி நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு வந்த சகோதரர்கள் அங்குள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தனர். இதை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் மீண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆனால் அங்கு வந்த மாணவர்கள், அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. அங்கிருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்று விட்டனர்.


Next Story