கிராம மக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய போலீசார்
கிராம மக்களுக்கு விளையாட்டு உபகரணங்களை போலீசார் வழங்கினர்.
பெரம்பலூர்
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் நேற்று கீழப்புலியூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது கோடை காலத்தில் வயல்வெளிகளில் விவசாய வேலைகள் குறைவாக இருக்கும் நிலையில், அதிக நேரம் கடைவீதியில் உள்ள மரத்தின் அடியில் அமர்ந்து, நேரத்தை வீணாக செலவிடுவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுகள் ரமேஷ், சங்கரபாண்டியன் ஆகியோர் அந்த கிராம மக்களின் நேரத்தினை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செலவிடும் வகையில் அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட கிராம மக்கள் போலீசாரை பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story