கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை


கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கரூர்

சுதந்திர தினம்

நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி கரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரெயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை செய்து வருகின்றனர்.

மெட்டல் டிடெக்டர் கருவி

பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றில் உள்ள வாகனங்களை ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர்.அப்போது நீண்ட நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் சோதனை செய்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story