வாழை இலை வியாபாரியிடம் நகை பறித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வாழை இலை வியாபாரியிடம் நகை பறித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முகவரி கேட்பது போல் நடித்து வாழை இலை வியாபாரியிடம் நகை பறித்த 3 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

முகவரி கேட்பது போல் நடித்து வாழை இலை வியாபாரியிடம் நகை பறித்த 3 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாழை இலை வியாபாரி

பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையத்தை அடுத்த கானல் புதூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(வயது 47). வாழை இலை வியாபாரி. இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் அண்ணன் மகன் லோகதர்ஷனுடன்(12) மூலக்கடை-முத்துக்கவுண்டனூர் சாலையில் குப்பியன் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். தொடர்ந்து அவர்கள், காளீஸ்வரனை வழிமறித்தனர். தொடர்ந்து ஒரு வாலிபர் மட்டும் கீழே இறங்கி அவரிடம் பெட்ரோல் நிலையத்துக்கு எப்படி செல்வது? என்று வழி கேட்டார்.

போலீசில் புகார்

அதற்கு அவர் பதில் கூறிக்கொண்டு இருந்தபோது, திடீரென மொபட்டின் சாவியை அந்த வாலிபர் பிடுங்கினார். தொடர்ந்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்தார். பின்னர் மற்ற 2 வாலிபர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இவை அனைத்தும் அடுத்தடுத்த நொடிகளில் நிகழ்ந்ததால், காளீஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற 3 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்.

1 More update

Next Story