பெட்டிக்கடையில் பட்டா கத்தியுடன் ரகளை 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு


பெட்டிக்கடையில் பட்டா கத்தியுடன் ரகளை 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x

கும்மிடிப்பூண்டி அருகே பெட்டிக்கடையில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுப்பட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுபானக்கடையின் அருகே வலைகூண்டு என்ற இடத்தில் ரமேஷ் (வயது 48) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடை உள்ளது. நேற்று (சனிக்கிழமை) இங்கு வந்த பிரபல ரவுடியான அண்டவாயல் விஜி (24) தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பல் பெட்டிகடையில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் கடை உரிமையாளர் ரமேஷ் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த வேலு (45) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story