பெண்கள் பாதுகாப்பு குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு


பெண்கள் பாதுகாப்பு குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
x

பெண்கள் பாதுகாப்பு குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

பெண்கள் பாதுகாப்பு குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

பெண்கள் பாதுகாப்பு

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்கள், தேயிலை தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் ஆகியோருக்கு பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொல்லை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் போலீஸ்சாருடன் வால்பாறை அருகில் உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதிக்கு சென்று தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பாலியல் தொல்லைகள் குறித்தும், பணிபுரியக்கூடிய இடங்களில் எவ்வாறு பாலியல் தொல்லைகள் வரும் அதிலிருந்து தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது, அது குறித்து தயக்கமில்லாமல் போலீஸ்சாருக்கு எப்படி தகவல் சொல்வது, அதற்கான செயலியையும் தொலைபேசி எண்களையும் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போலீசார் விழிப்புணர்வு

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் ஏதாவது சட்ட விரோத செயல்கள் நடைபெற்றாலும் அது குறித்தும் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


Next Story