வினாத்தாள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

பிளஸ்-2 பொதுத்தேர்வையொட்டி வினாத்தாள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர்
வால்பாறை,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வால்பாறை பகுதியில் 4 அரசு மேல்நிலை பள்ளிகள், 3 தனியார் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 495 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் நேற்று முன்தினம் இரவு வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவன் ராஜ் வினாத்தாள் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story






